• Feb 20 2025

எங்க அண்ணா இப்போ ஹீரோ; அவருக்கு 'Y' இல்ல 'Z' பிரிவுல பாதுகாப்பு கொடுங்க!அல்டிமேட் சம்பவம்

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறியப்பட்ட கூல் சுரேஷ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின்னர் பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன்படி தற்போது 'மஞ்சள் வீரன்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

இயக்குநர் செல்அம் இயக்கும் இந்த படத்தில் ஏற்கனவே TTF  வாசன் கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனாலும் இயக்குனருக்கும் வாசனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் தூக்கப்பட்டார்.

அதற்கு பிறகு டிடிஎஃப் வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷை 'மஞ்சள் வீரன்' படத்தின் கதாநாயகன் ஆக்கினார் செல்அம். மேலும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில்படப்பிடிப்பு பூஜை மற்றும் போஸ்டர்களும் வெளியாகி வைரலாக இருந்தது.


இந்த நிலையில், நடிகர் கூல் சுரேஷ் வழங்கிய பேட்டி ஒன்று வைரலாகி வருவதோடு அதில் அவருடன் இருந்த சக படக்குழுவினர் ''அடுத்த தளபதி எங்கள் அண்ணா தான்.. அவருக்கு Y இல்ல Z பிரிவில பலத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்..'' என கத்திகூச்சலிட்ட சம்பவங்களும் இணையத்தில்  வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர்கள் கூறுகையில், எங்க அண்ணன் இப்போ ஹீரோ ஆகிட்டார்.. நாளைக்கு இவருடைய படம் தியேட்டரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.. அதனால் நான் இப்போதே கேட்டுக் கொள்கின்றேன் எங்களுடைய அண்ணனுக்கு y  பிரிவு இல்லை z பிரிவில் பாதுகாப்பு கொடுக்கணும்.

இளைய தளபதி விஜய் விட்டுப் போன இடத்தை எங்களுடைய அண்ணன் நிரப்புவார் என கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதன் போது கூல் சுரேஷின் கைகளை உயர்த்தி அவர்கள் கூச்சலிட்டதோடு 'வெந்து தணிந்தது காடு.. கூல் சுரேஷிற்கு வணக்கத்தை போடு..' என தெரிவிக்க,  நல்லா போட்டு விட்டீங்க போங்க என கூல் சுரேஷ் அந்த இடத்தில் கொடுத்த ரியாக்ஷனும் தற்போது வைரலாகி வருகின்றது .

Advertisement

Advertisement