தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் சிறப்பு பெயரினைப் பெற்றவர் நடிகை மாளவிகா மோகனன். தனது நடிப்பு மற்றும் அழகால் சமூக வலைத்தளங்களில் அதிகளவான இளம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தார். தற்போது அவர் வெளியிட்ட Black கலர் ஸ்டைலிஷ் உடை புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
மாளவிகா மோகனன், தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த 'பேட்ட' படத்தின் மூலம் அறிமுகமானார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தில், சிறிய அளவு பங்களிப்பாக இருந்தாலும், மாளவிகாவின் அழகு மற்றும் திரைச்சாயல் ரசிகர்களை கவர்ந்தது.
பேட்ட படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரசிகர்களிடையே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அதற்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் ஜோடியாக நடித்ததன் மூலம், மாளவிகா மோகனனின் புகழ் பன்னாட்டு அளவுக்கு உயர்ந்தது.
'மாஸ்டர்' வெற்றிக்குப் பிறகு, 2022ஆம் ஆண்டு தனுஷுடன் இணைந்து நடித்த 'மாறன்' படத்தில் மாளவிகா மோகனன் ஒரு பத்திரிகையாளராக நடித்து, கதையில் முக்கிய பங்காற்றினார். ஏற்கனவே தனுஷ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மாளவிகாவின் வருகை திரைப்படத்துக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
சினிமா செயல்பாடுகளோடு மட்டுமல்லாமல், மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தள பக்கங்களிலும் சிறப்பாக தன்னை ப்ரொமோட் செய்து வருகிறார். தொடர்ந்து விதவிதமான ஆடைகளில் படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தற்பொழுது அவர் வெளியிட்ட Black கலர் ஸ்டைலிஷ் உடையிலான போட்டோஷூட் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அந்த உடையில் அவர் எடுத்த போஸ்கள் மிகவும் கவர்ச்சியுடனும், அதே நேரத்தில் மாடர்ன் கிளாஸுடன் காணப்பட்டது. வைரலான போட்டோஸ் இதோ..!
Listen News!