• Dec 07 2024

BIGG BOSS-8 வீட்டுக்குள்ளே சென்ற போட்டியாளர்கள்... டம்மி டிராபி கொடுத்து மக்கள் செல்வன்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியானது இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகஉள்ள நிலையில் தற்போது அதன் ஷூட்டிங் வேலைகள் நிறைவடைந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே சென்றுள்ளனர். 


விஜய் சேதுபதி டம்மி டிராபிய எல்லா போட்டியாளர்களுக்கு கொடுத்து இருக்காங்க. சின்னத்திரை செல்லமா சீரியல் நடிகை அன்ஷிதா சூப்பரான நடனம் ஒன்றை ஆடிவிட்டு விஜய் சேதுபதியுடன் கதைத்துவிட்டு வீட்டுக்கு உள்ளே போயிருக்காங்க. அடுத்தது பிக் பாஸ் வரலாற்றிலே முதன் முறையாக வயது குறைந்த போட்டியாளராக சஜனா உள்ள போயிருக்காங்க. இவங்க மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருப்பார். 


அடுத்ததாக சூப்பரான டான்ஸ் பfபோமன்ஸ் கொடுத்துட்டு தர்ஷிகா உள்ள போயிருக்காங்க. அவரை தொடர்ந்து கவுண்ட பாளையம் நடித்து முடித்து பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த நடிகர் ரஞ்சித் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள்ள போயிருக்காரு. அதே போல நடிகர் தீபக் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போயிருக்காரு.


இந்த நிலையில குக் வித் கோமாளி சுனிதா நல்ல நடன திறமை கொண்டவர். அதே நேரம் நகைச்சுவையிலும் கலக்கும் சுனிதா பிக் பாஸ் வீட்டில் என்னவெல்லாம் செய்ய போகிறார் டைட்டில் வின்னர் ஆவாரா என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்


இப்படி 18 போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டுக்கு எதற்காக வந்தோம் என்பதை விஜய் சேதுபதியிடமும் மக்களிடமும் கூறிவிட்டு பிக் பாஸ் வீட்டுக்குள்ள போயிருக்காங்க இனிதான் ஆட்டம் சூடுபிடிக்க போகுது அண்ணா-தங்கை பாசம், அம்மா-மகன் பாசம், காதலர்கள் கலாட்டா, சண்டை ரகளைகள் என இந்த 100 நாட்களும் ரொம்பவே கலகலப்பா இருக்கப்போகிறது.    


 




.

Advertisement

Advertisement