• May 19 2024

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல முதல் கணவருடன் ரொமான்ஸ் செய்த மைனா நந்தினி- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் மைனா நந்தினி. துமல் சீரியலே நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததைத் தொடர்ந்து பல ஷோக்களில் பங்குபற்றி வந்தார். இது தவிர சீரியல்களிலும் நடித்திருந்தார்.


மேலும் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக வெள்ளித்திரையிலும் அறிமுகமாகினார்.அந்த வகையில் இறுதியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் திரைப்படத்திலும் கார்த்தி நடிப்பில் வெளியாகிய விருமன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.


முன்னதாக திருமணமாகி தனது கணவரை இழந்த இவர் சீரியல் நடிகர் யோகேஸ்வரனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு துருவ் என்கிற மகன் உள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடாத்தி வருகின்றார்.


பிக் பாஸ் சீசன் 6 -ல் இவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ளார். இது  இவருக்கு மேலும் பிரபலத்தைப் பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்தில் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்ற இவர்களது புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகிய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று வந்தது. 


இந்நிலையில் மைனா நந்தினி தனது கணவரின் கன்னத்தில் முத்தமிட்டபடி கொடுத்த புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் உலா வருகிறது.இது அவர் பிக்பாஸ் ஷோவிற்கு செல்ல முதல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.அத்தோடு தனக்கு மக்களின் ஆதரவு தேவை என வீடியோ ஒன்றினையும் பதிவிட்டுள்ளார்.





Advertisement

Advertisement