• Jan 15 2025

யோகி பாபு மூஞ்சில மைனா நந்தினி போட்ட கோலம்... இப்படியெல்லாமா பண்ணுவாங்க?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

ராதா மோகன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடித்த திரைப்படம் சட்னி சாம்பார். இந்த படத்தில் யோகி பாபு உடன் கயல் சந்திரன், நிதின் சத்யா,  மைனா நந்தினி நிழல்கள் ரவி நடித்துள்ளதோடு, 6 எபிசோட் களாக இந்தப் படம் Hotstar-ல் சீரிஸ் தான் வந்துள்ளது.

ஊட்டியில் இப்படி ஒரு சாம்பார் எங்கு கிடைக்காது இந்த ஊர் உலகமே அந்த சாம்பருக்காக தான் வரும் என்பது போல அமுதா கஃபே  என்ற ஹோட்டலை நடத்தி வருகின்றார் நிழல்கள் ரவி. அவருக்கு அன்பான மனைவி அழகான குடும்பம் இருக்க எதிர்பாராத விதமாக அவருக்கு கேன்சர் வந்து மூன்றாவது கட்டத்தை அடைந்து தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டுள்ளார்.

இதன்போது அவர் ஏற்கனவே ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்ததாகவும் சில காரணத்தால் அந்தப் பெண்ணை விட்டு பிரிந்ததாகவும் இப்போது அந்த பெண் உயிரோடு இல்லை ஆனால் எனது பையன் அங்கு இருக்கின்றார் அவரை அழைத்து வரவேண்டும் எனது இறுதி சடங்குகள் அனைத்தும் அவர்தான் செய்ய வேண்டும் இந்த குடும்பத்தில் அவரை ஒருவராக பார்க்க வேண்டும் என தனது குடும்பத்திடம் சத்தியம் வாங்குகிறார்.

அவர்தான் ஜோகி பாபு. அவரை வீட்டிற்கு கூட்டி வரும் போது நிழல்கள் ரவியும் இறக்கின்றார். அதன் பின்பு இவரை குடும்பத்தினர் ஏற்றார்களா என்பது தான் இப்படத்தின் மீதி கதை.


இந்த படம் கத்தி, ரத்தம் , கூச்சல் எதுவும் இல்லாமல் சந்தோஷமாக பொழுது கழிக்க கூடியவாறு இருந்ததாக நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போது எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட்டில் யோகிபாவுக்கு மைனா நந்தினி மேக்கப் பண்ணுகின்றார். அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.


Advertisement

Advertisement