• Oct 07 2024

அமெரிக்காவில் வெங்கட்பிரபுவை சந்தித்த "மகாராஜா" படக்குழு.என்னவா இருக்கும் ?

Thisnugan / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட்பிரபு தற்போது விஜய் நடிப்பில் உருவாகும் "கோட்" படத்தின் திரையிடலுக்கான இறுதிகட்ட வேலைகளில் இருக்கிறார்.அந்தவகையில் விஎப்எக்ஸ் வேலைகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு.


இந்நிலையில் கடந்த வாரத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 50 வது படமான "மகாராஜா" பெருவரவேற்போடு இன்று வரை திரையரங்குகளில் ஓடுகிறது.அத்தோடு 'மகாராஜா' திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு திரையிடலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 


இதனை முன்னிட்டு, 'மகாராஜா' படக்குழு அமெரிக்கா சென்றிருக்கிறது.அங்கு இவர்களை சந்தித்த வெங்கட்பிரபு திரைப்படத்தின் வெற்றிக்காகவும் சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்படத்தின் தெரிவுக்காகவும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.இவர்கள் சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.



Advertisement

Advertisement