• May 20 2024

கோப்ரா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள மதுரை முத்து- அதுவும் என்ன காரெக்டரில் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தெரிந்தெடுத்து நடிப்பதில் முக்கியமானவராக வலம் வருபவர் தான் விக்ரம். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இப்படத்தில் விக்ரம் பல கெட்டப்புக்களில் நடிப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகியாக கே.ஜி.எப் திரைப்பட நடிகை ஸ்ரீ நிதி கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த நிலையில் இன்றைய தினம் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருந்தது.


அந்த வகையில் இந்த சீரியலில் விஜய்டிவி பிரபலமும்  சமீபத்தில் நிறைவடைந்த கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்த மதுரை முத்துவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதாவது தற்போது வெளியாகி இருக்கும் படத்தின் ட்ரைலரில் அவரும் இடம்பெற்று இருக்கிறார்.இது குறித்த போட்டோவை ரசிகர்கள் வைரலாக்கி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement