• Aug 08 2026

காதலா? பணமா? மனோஜ் வாழ்க்கையில் புதிய சிக்கல்.! முத்து போட்ட மாஸ்டர் பிளான்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரேகா எங்கே இருக்கின்றார் என்று அவருடைய அப்பா விசாரிக்க ஆரம்பிக்கின்றார். அதே நேரத்தில் முத்து, ரேகாவுக்கும் சத்யாவுக்கும் பாட்டியின் ஊரில் வைத்து திருமணத்தை நடத்தி முடிக்க திட்டமிடுகின்றார்.

அதன்படி சத்யாவின் அம்மாவையும் சீதாவையும் பாட்டியின் ஊருக்கு வருமாறு அழைக்கின்றார். அத்துடன் இது அருணுக்கு தெரிய வேண்டாம் என்றும் கூறுகின்றார். அதனால் சீதா தான் குலதெய்வம் கோயிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறுகின்றார்.

இன்னொரு பக்கம் மனோஜை பார்க்க வந்த ஜோசியக்காரர், “ரோகினி கட்டாயம் விவாகரத்து வழங்குவார். அவருடைய பெயருக்கும் உங்களுடைய பெயருக்கும் பொருத்தம் இல்லை. அதனால் தான் இவ்வளவு பிரச்சனை” என்று கூறுகின்றார்.


அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்ற பின்பு ரோகினி அங்கு வந்து, தனக்கு 5 லட்சம் தந்தால் எந்தவித கண்டிஷனும் இல்லாமல் விவாகரத்து கொடுப்பதற்கு ஒத்துக் கொள்கிறேன் என்கிறார். ஆனாலும் மனோஜ் சற்று அப்செட் ஆகி ரோகிணியின் கைகளை பிடித்து, “நான் இல்லாமல் நீ வாழ்வியா?” என்று பேசுகின்றார்.

இதனால் ரோகிணியும், “நீ உன்னுடைய அம்மாவை பற்றி யோசிக்கும் போது நான் என்னுடைய மகனைப் பற்றி யோசிக்க வேண்டும். நீயும் என்னுடன் வந்து வாழ்வதாக தெரியவில்லை. அதனால் விவாகரத்து வழங்குகிறேன். நீ சந்தோஷமாக இரு” என்று கூறுகின்றார்.

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு சென்ற மனோஜ் தனியாக இருந்து ரோகினியின் முடிவு மற்றும் அவருடன் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை பற்றி யோசிக்கின்றார்.

மறுநாள் மீண்டும் மனோஜை வந்து பார்த்த ஜோசியக்காரர், “நான் சொன்னது போல் நடந்து விட்டதா?” என்று கேட்கின்றார். அதற்கு மனோஜ், “எல்லாம் நடந்து விட்டது தான். ஆனால் ரோகிணி என்னை விட்டுப் போகின்றார் என்பதை கேட்டு மனம் சரியில்லை” என்று கூறுகின்றார். 

அதற்கு ஜோசியக்காரர், “உன்னை தேடி கோடிக்கணக்கில் பணம் வரப் போகின்றது” என்று சொன்னதும் மனோஜ் உற்சாகமாகி விடுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement