• Jul 20 2026

எல்லோராலும் ராஷ்மிகா மந்தனா ஆக முடியாது!- ஓப்பனாகப் பேசிய ஐஸ்வர்யா

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

'தக் லைப்' படத்தைத் தொடர்ந்து, 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஷ்ணு விஷாலுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி, இப்படத்தில் குஸ்தி வீராங்கனையாக வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா லட்சுமியிடம், 'பொன்னியின் செல்வன்' படத்தில் பூங்குழலி போன்ற குறுகிய கதாபாத்திரங்களை ஏன் தேர்வு செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், "ஒரு கதாபாத்திரம் பெரியதா, சிறியதா என்பது முக்கியமல்ல. அந்தக் கதாபாத்திரம் கதைக்கு என்ன மதிப்பு சேர்க்கிறது, அது எனக்கு நடிகையாக திருப்தி அளிக்கிறதா என்பது தான் முக்கியம்" என்று பதிலளித்தார்.

மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனாவைப் பற்றி மிகவும் பாராட்டிய அவர், "எல்லோராலும் ராஷ்மிகா மந்தனாவாக முடியாது. முழுநீள கமர்ஷியல் கதாநாயகி கதாபாத்திரங்களை அவர் மிகச் சிறப்பாகவும் நளினமாகவும் செய்கிறார். 

அந்த அளவுக்கு நடனமாடவோ அல்லது முழுமையான கமர்ஷியல் ஹீரோயினாக என்னால் இருக்க முடியாது. ஒவ்வொரு நடிகருக்கும் தனித்துவமான பாதையும் திறமையும் இருக்கிறது" என்று மனம் திறந்து பேசினார். அவரது இந்த தன்னடக்கமான கருத்து ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement