• Jun 29 2024

படப்பிடிப்பில் கமல் செய்த விடயத்தால் வியந்து போய் நின்ற லோகேஷ்- என்னால் இது செய்யவே முடியாது

stella / 1 year ago

Advertisement

Listen News!

மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் புதுமுக இயக்குநராக அறிமுகமாகியவர் தான் லோகேஷ் கனகராஜ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். அதுவும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் என்னும் படத்தை எடுத்தார். அது பிளாகக் பஸ்டர் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக்குவித்தது.இவ்வாறு கமர்ஷியல் ஹிட்டை கொடுத்த இவர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்னும் படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு கமல்ஹாசன் நடித்துள்ளதால் பலரும் பாராட்டி வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.

விக்ரம் படத்தின் வெற்றியின் மூலம் புது உத்வேகத்துடன் காணப்படும் கமல் அடுத்ததாக கிடப்பில் இருக்கும் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு நாள் கமல் மருதநாயகம் படத்தை பற்றி பேசியுள்ளார். அப்போது கமல் மற்றும் லோகேஷ் இருவரும் உணவு உண்டு கொண்டிருந்த போது கமல் லோகேஷிடம் மருதநாயகம் பற்றி பேசினார். பேசிக்கொண்டிருக்கும் போது கமல் தன்னை மறந்து மருதநாயகமாகவே மாறிவிட்டாராம்.

மருதநாயகம் போன்று வசனங்களை பேசிய கமலை பார்த்து லோகேஷ் அசந்து போனாராம். சாப்பிட்ட கையோடு தன்னை மறந்து லோகேஷ் கமலை பார்த்து வியந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் கமல் என்னை மருதநாயகம் படத்தை கொடுத்து இயக்க சொன்னால் கண்டிப்பாக என்னால் இயக்கமுடியாது என கூறியுள்ளார் லோகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement