• Jan 15 2025

பாலிவுட் சினிமாவில் களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்! ஹீரோ யாரு தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக காணப்படுபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அத்தனையும் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது.

கார்த்தியை வைத்து கைதி, உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம், இளைய தளபதி விஜய் உடன் லியோ ஆகிய படங்களில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையே தன் பக்கம் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே அதற்கு தனி மவுசு காணப்பட்டது.

தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை தயாரித்து வரும் லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்த படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

அதன்படி கார்த்தியின்  கைதி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அதன் இரண்டாவது பாகத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். பெரும்பாலும் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் முடிந்த பிறகு அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்த நிலையில், தற்போது பாலிவுட் சினிமாவிலும் கால் பதிக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன.

அதன்படி பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான அமீர்கானை வைத்து படம் ஒன்றை தயாரிக்க போவதாகவும் அந்த படத்தினை மைதிரி  மூவிஸ் ப்ரொடியூஸ் பண்ண போவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement