நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்ட ஸ்ருதிஹாசன், ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தனுஷ், விஷால், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள அவர், தெலுங்கு சினிமாவிலும் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக நந்தமூரி பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த பெருமையும் இவருக்கே உரியது.
பிற்பகுதியில் ஹிந்தி வெப் சீரியஸ்களிலும் திரைப்படங்களிலும் நடித்து புதிய பரிசோதனைகளிலும் குதித்தார். சில துணிச்சலான காட்சிகளிலும் பங்கேற்று விவாதங்களை உருவாக்கியுள்ளார்.
பல வருடங்களுக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு முன்பே லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ஒரு ஆல்பம் வீடியோவிலும் நடித்திருந்தார். அந்த ஆல்பத்தில் இடம் பெற்ற நெருக்கமான காட்சிகள் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டன.
‘கூலி’ படக் குழுவுடன் சமீபத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் கலந்து கொண்ட ஸ்ருதி, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். "ப்ரீத்தி டைரிஸ்" என கேப்ஷனும் அளித்துள்ளார். மேலும், "இந்த படம் எனக்கொரு அழகான அனுபவமாகும். நல்ல நண்பர்களையும் இனிமையான நினைவுகளையும் ஈட்டியுள்ளேன். என் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றி" என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Listen News!