• May 22 2024

'LEO' பட பிரபலத்தின் பிறந்தநாள்.. முத்தம் கொடுத்து வாழ்த்திய லோகேஷ் - செலிப்ரேஷன் புகைப்படங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜுடன் இணைந்து காஷ்மீரில் கடும் குளிரில் தீவிரமாக உருவாகி வரும் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


அனிரூத் இசை அமைப்பில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து இணையதளங்களில் வெளியாகி ட்ரெண்டிங்காகிக் கொண்டிருக்கின்றது.


இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.ந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.


இந்நிலையில் காஷ்மீரில் இருக்கும் லியோ படக்குழு, கலை இயக்குநர் சதீஷ்குமாரின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினர். அப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கலை இயக்குநர் சதீஷ்குமாருக்கு முத்தம் கொடுத்து வாழ்த்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. கலை இயக்குநர் குழு, லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் ஆகியோர் புகைப்படங்களில் காட்சியளிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.







Advertisement

Advertisement