• May 08 2026

வதந்திகளுக்கு இடமில்லை.! ஆதவ் அர்ஜுனா குறித்த கேள்விகளுக்கு நச்சென பதிலளித்த லதா

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த் குறித்து சமீபத்தில் அரசியல் வட்டாரத்தில் கிளம்பிய சர்ச்சை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலுக்கு அவர் வர விரும்பியிருந்தாலும், திமுக தரப்பிலிருந்து மிரட்டல்கள் இருந்ததால் அவர் அரசியலுக்கு வரவில்லை என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்த கருத்து சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் கிளப்பியது.


இந்த விவகாரம் பெரிதாக மாறிய நிலையில், ரஜினிகாந்த் தானே இதுகுறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தன்னை ஆதரித்து பேசிய அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், “காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்ற வரிகளை குறிப்பிட்டார். இந்த ஒரு வரி ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியது. அவர் நேரடியாக யாரையும் குறிவைக்காமல், அமைதியான ஆனால் வலுவான பதிலை அளித்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், லதா ரஜினிகாந்த் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த சர்ச்சை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த லதா, மிகவும் அமைதியான மற்றும் தெளிவான அணுகுமுறையை எடுத்துக்கொண்டார். “ரஜினியே இதெல்லாம் உண்மை இல்லை, தவறான வதந்திகளை பரப்பாதீர்கள் என்று சொல்லிவிட்டார். அதனால் இதுகுறித்து நான் மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை.” என்று கூறி, விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதே நேரத்தில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்த கேள்விக்கும் அவர் பதில் அளித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றாலும், “அந்த நாளுக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று கூறினார். இந்த தகவல் ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement