விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சீதாவின் தாலியை திருடி சென்ற பெண்ணை மீனா விரட்டி பிடிக்கின்றார். இதன் போது அவர் விஜயா வீட்டுக்கு வந்து ஜோசியம் சொன்ன பெண் என மீனா அறிந்து கொள்கிறார்.
அதற்கு பிறகு அங்கு நடந்தவற்றையும், அதை திருடி சென்ற பெண் வேறு யாரும் இல்லை, வீட்டிற்கு வந்த ஜோசியம் சொன்னவர் தான் என மீனா விஜயாவுக்கு சொல்லுகின்றார். ஆனால் விஜயா நம்ப மறுக்கிறார். மேலும் மீனா மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக பொய் சொல்லுகின்றார் என்று பேசுகிறார்.
ஆனாலும், இந்த விஷயத்தை நிரூபித்தால் நீங்க என்ன பண்ணுவீங்க? என முத்து விஜயாவுக்கு செக் வைக்கிறார். அப்படியானால் பார்க்கலாம் என அங்கிருந்து கிளம்புகிறார் விஜயா.
அதற்கு பின்பு மீனாவும் முத்துவும் அந்த பெண்ணை பிடிப்பதற்காக செல்கிறார்கள். அங்கு இருந்த கடையில் சிசிடிவி கேமரா மூலம் அவரை பார்க்கின்றனர். எனினும் அதில் அவரது முகம் தெளிவாகக் காணப்படவில்லை. இருப்பினும் அவர் தப்பிச் செல்லும் போது விட்டுச் சென்ற பஸ்ஸை கண்டுபிடித்து எடுக்கின்றனர்.

இன்னொரு பக்கம், தாலியை தொலைத்து விட்டு சீதா வீட்டுக்கு சென்றதும், அருண் திட்டுகின்றார். மேலும் என்னை அழைக்காத இடத்திற்கு நீ ஏன் சென்றாய்? என்னுடைய அம்மாவின் நினைவாக தான் அந்த தாலி உன்னுடைய கழுத்தில் இருந்தது. அந்த தாலி இல்லாமல் இனி இங்கு வர வேண்டாம் என்று சீதாவை அடித்து விரட்டுகிறார்.
இறுதியில், திருடிச் சென்ற பெண்ணின் வீட்டிற்கு அருகில் முத்துவும் மீனாவும் வந்த போது, அங்கு முத்துவின் நண்பரை சந்தித்து, அட்ரஸைக் காட்டி விசாரிக்கிறார். இதனால் அங்கு செல்ல வேண்டும் என்றால் கெட்டப்பை மாற்றி தான் செல்ல வேண்டும் என்று முத்து திட்டம் வகுக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!