• May 09 2024

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆர்யனா இது?-தாடி எல்லாம் வைத்து எப்படி இருக்கிறார் என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் பெங்காலி மொழியில் வெளியான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக் என்பதும் முக்கியமாகும். இந்த சீரியல் தான் ரி ஆர் பியிலும் முன்னணியில் நிற்கின்றது.

எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் சமூகத்தில் நடக்கும் முக்கியமான விஷயங்களை தொடர் பேசிக்கொண்டு தான் வருகிறது. இதில் கோபி எப்போது பாக்கியா-ராதிகாவிடம் சிக்குவார், அவருக்கு எப்போது தகுந்த தண்டனை கிடைக்கும் என தான் மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த சீரியலின் ஆரம்பத்தில் செழியன் என்ற வேடத்தில் ஆர்யன் என்பவர் நடித்து வந்தார். அவர் இடையில் தொடரில் இருந்து வெளியேற வேறொருவர் நடித்து வருகிறார்.

தற்போது ஆர்யன் கனா காணும் காலங்கள் வெப் தொடரில் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் அவரது லுக் புகைப்படம் முதன்முறையாக வெளியாகியுள்ளது. அதில் தாடி எல்லாம் அதிகம் வளர்த்து ஆளே மாறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகது.

Advertisement

Advertisement

Advertisement