• Jan 19 2025

திடீரென கண்ணீர் கதையை சொன்ன கேபிஒய் தீனா மனைவி.. என்ன ஆச்சு?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

'கலக்கப்போவது யார்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கேபிஒய் தீனாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் கதையை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கலக்கப்போவது யார்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா. அதன்பிறகு அவர் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

தனுஷ் இயக்கத்தில் உருவான ’பா பாண்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர், அதன் பிறகு ’கைதி’ ’மாஸ்டர்’ ’புலிக்குட்டி பாண்டி’ ’விக்ரம்’ ’மறக்குமா நெஞ்சம்’ ’கள்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் ’டீசல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரகதி என்பவரை தீனா திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவரது மனைவி ஆடை வடிவமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தீனா மற்றும் அவரது மனைவி பிரகதி ஆகிய இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீரை பற்றிய ஒரு பதிவு செய்துள்ளனர்.

அந்த பதிவில் ’ஒரு நல்ல கணவன் மனைவியின் கண்ணீரை துடைத்து விடுவான், ஆனால் ஒரு அற்புதமான கணவன் அந்த கண்ணீருக்கான காரணத்தை கேட்பார்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement