• Jan 19 2025

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 3 லட்சம் செலவில் தன்னால் இயன்ற உதவியை வழங்கிய kpy பாலா... குவிந்து வரும் பாராட்டுகள்... கண்கலங்கி நன்றி சொல்லும் மக்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. இதனால், வட தமிழக கடற்கரையை நோக்கி நகர துவங்கிய இந்த புயலால் டிசம்பர் 4ந் தேதி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தீர்த்துவிட்டது.


இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத்துறையினர் மீட்டு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும், 50 மேற்பட்ட நிவாரண முகாம்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுளளனர்.

விஜய் டிவி பிரபலமான பாலா அவரது குடியிருப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒவ்வொன்றிற்கும் தலா 1000 வீதம் 200 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்க இருந்தார். அதன்படி, அங்கிருக்கும் குடும்பங்களுக்கு மொத்தமாக  2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க இருக்கிறார்.


மேலும் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 3 லட்சம் செலவில் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார் நடிகர் பாலா. பள்ளிக்கரணையில் உள்ள 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், துரைப்பாக்கம் பல்லவன் நகரில் உள்ள மக்களுக்கு நைட்டி, லுங்கி உள்ளிட்ட ஆடை மற்றும் உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.


 ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்பு, 2 லட்சம் செலவில் பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா 1,000 நிவாரணமாக வழங்கி உதவி செய்தார். தான் வந்தபோது அரவணைத்த சென்னைக்கு தன்னால் முடிந்த உதவி என இதனை செய்து வருகிறார். இந்த உதவிகளை பெற்று கொண்ட மக்களும் நடிகர் பாலாவை வாய்த்தி வருகின்றனர். 

Advertisement

Advertisement