• Jan 19 2025

வினுஷா மேட்டரை மீண்டும் தூக்க காரணம் என்ன? ஜோக்கரா பயன்படுத்துறீங்களா? அர்ச்சனாவை விளாசிய கமல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது.  அதிலும், வார இறுதியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்றே பெரும் கூட்டம் காத்திருக்கும்.

அதே போன்று, இந்த வாரமும் அதாவது இன்றைய தினம் பிக் பாஸ் போட்டியாளர்களை வெளுத்து வாங்கியுள்ளார் கமல்.

இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோ ஒன்றில் பேசிய கமல்ஹாசன்,  இது என்ன வினுஷா பிரச்சினை என்று நிக்சனிடம் கேட்க, அதற்கு பதிலளித்த நிக்சன் உணர்ச்சிவசப்பட்டதை பார்க்க முடிந்தது. 


மேலும், தான் பிழையை உணர்ந்து விட்டதாகவும், அதற்காக வெளியில் சென்று வினுஷா காலில்கூட தான் விழத்தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து, மீண்டும் வினுஷா மேட்டரை எடுக்க காரணம் என்ன? என அர்ச்சனாவை பார்த்துக் கேட்டதோடு, அர்ச்சனா தன்னை பாதுகாத்துக் கொள்ள வினுஷா இல்லை என்பதையும் கோபத்துடன் தெளிவுப்படுத்தினார். 

அதுமட்டுமின்றி, அவர்கள் இல்லாத நிலையில், அவர்கள் குறித்து பேசியதும்  தவறு.. உங்களுக்கு சீட்டு சேராத போது அடுத்தவர்களை ஜோக்கராக பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்தார்.


எனினும், அர்ச்சனா பேச முயல, உப்புமா நன்றாக இருந்தால் அதை சாப்பிட்டிருக்கலாமே என்றும் அர்ச்சனாவின் கடந்த வார பேச்சுக்களுக்கு பதிலடி கொடுத்தார்.

இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக அர்ச்சனாவும் நிக்சனும் தம்மை தாமே மாறி மாறி கேவலப்படுத்தி பேசிய நிலையில், ரசிகர்கள் இந்தப் பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement