• Jan 19 2025

லேடி சூப்பர்ஸ்டார் வேணாம்... 10 பேர் பாராட்டுறாங்க 50 பேர் திட்டுறாங்க... இனிமே இப்படி சொல்லாதீங்க- நடிகை நயன்தாரா ஓபன் டாக்

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அன்னபூரணி. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் நயன்தாரா.


இந்த பேட்டியில் நடிகை நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என தொகுப்பாளினி அர்ச்சனா அழைக்க, உடனடியாக ஷாக்கான நயன்தாரா, "என்னை அப்படி அழைக்காதீர்கள். அப்படி என்ன அடையாளப்படுத்தினால் நிறைய பேர் திட்டுறாங்க" என கூறினார்.


இதற்கு விளக்கம் கொடுத்த நயன்தாரா " நான் ஒரு பெண்ணாக இருப்பதனால் எனக்கு இந்த பட்டம் இருக்க கூடாது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை 10 பேர் பாராட்டினால், 50 பேர் திட்டி தீர்க்கிறார்கள். இந்த பட்டத்தை நோக்கி என்னுடைய பயணம் கிடையாது. ஆனால், இந்த பட்டம் எனக்கு அனைவரும் சேர்த்து கொடுத்திருக்க கூட அன்பை காட்டுகிறது. அதற்கு மிகவும் நன்றி” என கூறினார்.


முதலில் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்காதீர்கள் என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நயன்தாரா, பின் இது ரசிகர்களின் அன்பு என்பதால் சரி என கூறினார். ஏற்கனவே சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து பல சர்ச்சை உலா வந்த நிலையில் தற்போது லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து நயன்தாரா பேசிய விஷயமும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement