• Apr 18 2026

படுத்தே விட்ட கோலிவுட்..! பெத்த பணம் பார்க்க திரையரங்குகளின் புதிய உத்தி? ஆனாலும் VIBE-ஆகும் மக்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான தளபதி விஜய், சூர்யா, ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகியோரின் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. அது போலவே குறித்து நடிகர்களின்  படங்களும் வசூலிலும் சாதனை படைக்கும்.

இவர்களுக்கு அடுத்தபடியாக தற்போது விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா, விஷால், சசிகுமார், சுந்தர் சி, ஆர்யா போன்ற  நடிகர்களின் படங்களும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அருண்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான  படங்கள் பெரிதளவில் எடுபடவில்லை. வசூலிலும் ஓரளவுதான் பெற்றுள்ளது, இதன் மூலம் தமிழ் சினிமா மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.


இந்த நிலையில், தற்போது மக்களை திரையரங்கிற்கு வரவழைக்க கடந்த ஆண்டுகளில் வெளியான ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகின்றன.


அதன்படி, திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும், அண்ணாமலை, யாரடி நீ மோகினி, வாரணம் ஆயிரம், பில்லா, திருமலை, வாலி, பிரேமம், காதலுக்கு மரியாதை, சிவா மனசுல சக்தி, கோ உள்ளிட்ட கிளாசிக் ZAI திரைப்படங்களை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.


புதிதாக வெளியாகும் சிறிய பட்ஜெட் மற்றும் அறிமுக நாயகர்களின் படங்களுக்கு பெரிதளவில் வரவேற்பு இல்லாத நிலையில், மக்களை திரையரங்கிற்கு வரவழைக்க இந்த ரீரிலீஸ் உத்தியை திரையரங்குகள் கையில் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement