• May 19 2024

பழம்பெரும் பாடகி வாணி ஜெயராமின் மறைவுக்கு கோலிவுட் பிரபலங்கள் இரங்கல்.

Jo / 1 year ago

Advertisement

Listen News!

புகழ்பெற்ற பழம்பெரும் பாடகியான வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். மேலும், அவர் நெற்றியில் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதாவது, அவர் தூங்கிக்கொண்டு இருக்கும்பொழுது கீழே விழுந்ததால் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பழம்பெரும் பாடகியின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அவரது குடும்பத்தினருக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை ராதிகா சரத்குமார் தனது டிவிட்டரில், “இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது, நேற்று இரவு நான் அவரது பாடலை வாசித்து, கே.விஸ்வநாத் சார் படத்தில் அவர் பாடலை எவ்வளவு அழகாக இருக்கிறது என்று என் கணவரிடம் சொன்னேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.


மேலும், இசையமைப்பாளர் டி இமான், வாணி ஜெய்ராமுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, “பழம்பெரும் பாடகி வாணி ஜெய்ராம் அம்மா இப்போது இல்லை என்ற கடினமான யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம் அம்மா. கடந்த ஆகஸ்ட் மாதம் அவரைச் சந்தித்து எனது வரவிருக்கும் “மாலை” படத்திற்காகப் பதிவு செய்தேன். ஆனால் இன்று இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.


நடிகை குஷ்பூ தனது பதிவில், பயங்கரமான செய்தி வருகிறது.. இன்னொரு ரத்தினத்தை நாம் இழந்துவிட்டோம் பல வருடங்களாக நம்மைக் கவர்ந்த ஒரு குரல் நம்மை மனவேதனைக்குள்ளாக்கியது. அவளுடைய இனிமையான மற்றும் மென்மையான இயல்பு அவளுடைய குரலில் தெளிவாகத் தெரிந்தது. நீங்கள் என்றும் நினைவில் இருப்பீர்கள் அம்மா என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


மேலும் பாடகர் முருகன், இசைதுறையின் மிகப்பெரிய இழப்பு அம்மாவின் உயிர் மறைந்தாலும் குரல் இவ்வுலகம் முழுவதும் ஒலித்து கொண்டு தான் இருக்கும். தங்களுடன் இருந்த வினாடிகள் ஒவொன்றும் வாழ்நாள் முழுக்க என் நினைவில் இருந்து கொண்டே இருக்கும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.இவ்வாறாக பல பிரபலங்கள் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement