• Jan 18 2025

ரஹ்மான் மகள் என்பதற்காக பழகுவார்கள்! மனசு கஷ்டமா இருக்கும்! கத்தீஜா பேட்டி...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். பல விருதுகளுக்கும், புகழுக்கும் சொந்தமான இவர் இந்த ஆண்டு வெளிவந்த ராயன், அயலான் போன்ற பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 


இவரது மகள் கத்தீஜாவின் இசையமைப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மின்மினி. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், கத்தீஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.


சிறுவயதில் முதல் எண்னிடம் பலர் வந்து பேசுவர், ஆனால் நான் அவர்கள் டைப்பாக இருக்கமாட்டேன், இருப்பினும் நான் ரஹ்மான் மகள் என்பதற்காக பழகுவார்கள் அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால், தற்போது நான் இசையமைத்த படம் வெளிவந்த நிலையில், முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரோகினி திரையரங்கிற்குச் சென்றிருந்தேன்.


அங்கு என்னிடம் வந்து பேசியவர்கள் எல்லாம் என்னை ரஹ்மான் மகள் என்று பார்க்காமல் கத்தீஜாவாக பார்த்தார்கள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என அந்த பேட்டியில் கூறினார்.

Advertisement

Advertisement