• Jan 15 2025

கார்த்தி - ஜெயம் ரவியுடன் மோத முடிவு செய்துவிட்ட கவின்.. நெல்சன் தந்த தைரியமா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலகில் தற்போது வளரும் ஹீரோவாக இருக்கும் கவின் ஏற்கனவே பல வெற்றிகள் கொடுத்த கார்த்தி மற்றும் ஜெயம் ரவியுடன் மோத முடிவு செய்துவிட்ட நிலையில் அதற்கு இயக்குனர் நெல்சன் தைரியம் தந்து இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகில் ஒரே நாளில் சில பிரபலங்களின் படங்கள் இணைந்து வெளியாகி வருகிறது என்பதும் அப்போதெல்லாம் எந்த நடிகரின் படம் வெற்றி பெறும் என்ற போட்டி ரசிகர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சமீபத்தில் கார்த்தி நடித்த ’மெய்யழகன்’ திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதே தேதியில் ஜெயம் ரவி நடித்த ’பிரதர்’ திரைப்படமும் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.



அது மட்டும் இன்றி கார்த்தி, ஜெயம் ரவி ஆகிய இரண்டு பிரபலங்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் தினத்தில் கவின் நடித்த ’பிளடி பிரதர்’ என்ற படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை நெல்சன் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ’மெய்யழகன்’ ’பிரதர்’, ‘பிளடி பெக்கர்’ ஆகிய மூன்றில் எந்த படம் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement