• Jan 18 2025

அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொள்ளலாம் என ஓப்பனாக சொல்லியிருக்கிறேன்.. பிக்பாஸ் காஜல்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசுபவர்களிடம் பேமெண்டில் வேண்டுமானால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளலாம், ஆனால் மற்ற விஷயத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடியாது என்று ஓப்பனாக கூறி விடுவேன் என்று பிக் பாஸ் காஜல் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல், டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவி என்பது தெரிந்ததே. அவர் சில படங்களில் நடித்துள்ள நிலையில் மற்ற நடிகைகளை போலவே அவருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை வந்துள்ளது என சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நாமாகவே ஒரு திரைப்படத்தில் வாய்ப்பு கேட்க சென்றால் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை கண்டிப்பாக இருக்கும் என்றும் ஆனால் நம்மை தேடி வாய்ப்புகள் வரும்போது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.

என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசுபவர்களிடம் பேமெண்டில் வேண்டுமானால் அட்ஜஸ்ட் செய்து கொள்ள தயார், ஆனால் மற்ற விஷயங்களை அட்ஜஸ்ட் செய்து கொள்ள மாட்டேன், அப்படி அட்ஜஸ்ட் செய்து தான் நடிக்க வேண்டும் என்றால், அதற்கு வேறு ஆளை பார்த்துக்கொள் என்று தெளிவாக சொல்லிவிடுவேன்’ என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவரிடம் வாய்ப்புகள் கிடைக்கும் போது ’நேரில் வாருங்கள் பேசிக்கொள்ளலாம்’ என்று ஒருவர் சொல்லிவிட்டால் என்றால் கண்டிப்பாக அவர் அட்ஜஸ்ட்மென்ட் தான் வரச் சொல்வார். எனவே இந்த மாதிரி ஏமாற்றுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று பிக் பாஸ் காஜல் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement