தென்னிந்திய திரையுலகில் பல வருடங்களாக ரசிகர்களின் இதயத்தில் தனி இடம் பிடித்திருக்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி, இன்று (நவம்பர் 7) தனது 44வது பிறந்தநாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்.

‘அருந்ததி’, ‘பாகுபலி’ போன்ற பல வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மாபெரும் ரசிகர்கள் வட்டத்தை பெற்ற அனுஷ்கா, தனது கேரியரில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, மகளிர் மையப்படங்களுக்கு புதிய உயரத்தை ஏற்படுத்தியவர்.
சமூக வலைத்தளங்களில் இன்று முழுவதும் #HappyBirthdayAnushkaShetty, #QueenAnushkaShetty, #Sweety44 ஆகிய ஹாஷ்டாக்குகள் டிரெண்டாகி வருகின்றன.
ரசிகர்கள், அவரின் புகைப்படங்கள், திரைப்படங்களின் காட்சிகள் மற்றும் பழைய நேர்காணல் வீடியோக்களை பகிர்ந்து, “சினிமாவில் வித்தியாசமான கதாநாயகி”, “ஒரு பெண் சக்தி”, “எல்லா காலங்களிலும் அழகும் திறமையும் கலந்து உள்ள நடிகை” என பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அனுஷ்காவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, அவர் தற்போது நடித்து வரும் " Kathanar" படக்குழுவினர், இன்று ஒரு பிரத்தியோக போஸ்டர் வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் அனுஷ்கா ஷெட்டி வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளித்துள்ளார்.
Listen News!