தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படுபவர் தான் நடிகர் கார்த்தி. இவர் பிரபல நடிகர் சிவக்குமாரின் மகனும் சூர்யாவின் தம்பியும் ஆவார்.
நடிகர் கார்த்திக்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.
கடந்த மே 25ஆம் தேதி கார்த்தி தனது 47வது பிறந்த நாளை கொண்டாடினார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க ரத்த தான முகாம்கள் நடைபெற்றது.
இவ்வாறு இரத்த தானம் செய்தவர்களில் முதற்கட்டமாக வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200 ரசிகர்களை நடிகர் கார்த்தி நேரில் சந்தித்துள்ளார்.
மேலும் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி தடபுடலாக விருந்தும் அளித்துள்ளார் நடிகர் கார்த்தி. இதை தொடர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி, அவர்களுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த விழாவில் நடிகர் கார்த்தி பேசிய போது, நான் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எனது பிறந்த நாளில் ரத்ததானம் செய்தபோது உங்களுடன் கலந்து கொள்ள நினைத்தேன். ஆனாலும் உடல்நிலை சரியில்லாததால் கலந்து கொள்ள முடியவில்லை. அடுத்த முறை நிச்சயம் கலந்துகொள்வேன். நீங்கள் ரத்த தானம் செய்ததிலும் நன்றி.
அரசு மருத்துவமனைக்கு யாரும் பெரிதாக ரத்தம் கொடுப்பதில்லை. ஆனால் நீங்கள் யார் என்றே தெரியாதவர்களுக்கு ரத்தம் கொடுத்தீர்கள். இது சாதாரண விஷயம் அல்ல. உங்கள் அனைவருக்கும் நன்றி என மீண்டும் கூறியுள்ளார்.
இறுதியாக இரண்டு படங்கள் தற்போது நடித்து முடித்துவிட்டேன். விரைவில் அவை ரிலீஸ் ஆகி விடும். சர்தார் 2 படம் ஆரம்பிக்க இருக்கின்றது. அடுத்த வருடம் லோகேஸுடன் மீண்டும் பிரியாணி பக்கெட்டை தூக்க வேண்டும் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
Listen News!