• May 13 2024

"எனது சந்தோசமே நீ தான்"...ஆர்யாவை புகழ்ந்து தள்ளிய சாயிஷா…வைரலாகும் பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளரகவும் திகழ்ந்து வரும் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகவும் வலம் வருகின்றார். இவர் விஷ்ணுவர்த்தனின் இயக்கத்தில் 2005 இல் வெளியான 'அறிந்தும் அறியாமலும்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கின்றார்.

இவரது நடிப்பில் வெளியாகிய படங்களில் 'ஓரம் போ', 'நான் கடவுள்', 'மதராசபட்டினம்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'சிக்கு புக்கு', 'வேட்டை', 'சேட்டை', 'ராஜா ராணி', 'இரண்டாம் உலகம்' மற்றும் 'ஆரம்பம்' போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களால் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. இவை மட்டுமன்றி கிட்டத்தட்ட 25 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஆர்யா தனக்கென ஓர் தனித்துவமான பாணியில் நடிக்கும் திறமை கொண்டவர்.

இவரை போன்று தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துப் பிரபல்யமானவர் நடிகை சாயிஷா. இவர் 'வனமகன்' என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து 'கடைக்குட்டி சிங்கம்', 'ஜுங்கா', 'கஜினிகாந்த்', 'காப்பான்', 'யுவரத்தினா' போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

இவ்வாறாக படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வந்த இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இவர்கள் இருவருக்கும் 2021 இல் பெண் குழந்தை ஒன்று பிறந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக சந்தோசத்திற்கும், நின்மதிக்கும் குறைவில்லாமல் வாழ்ந்து வருகின்ற இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியில் சென்று அப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவது வழமை.

இந்த நிலையில் நடிகை சாயிஷா தனது அன்புக் கணவன் ஆர்யாவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றினை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அப்புகைப்படத்திற்கு கீழே "எனது சந்தோஷமே நீ தான்" எனப் பதிவிட்டு இருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் இத்தம்பதியினருக்கு தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement