• May 13 2024

தமிழ் சினிமாவின் நகைச்சுவைகளில் அறிவார்ந்த காலம் மலையேறி விட்டதா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை ஊமைப் படங்கள், கறுப்பு வெள்ளைத் திரைப்படங்கள், கலர் திரைப்படங்கள் என வகுக்கலாம். அது போல நகைச்சுவைகளிலும் அறிவார்ந்த நகைச்சுவைகள், அறிவு குறைந்த நகைச் சுவைகள் என இரண்டாக வகுக்கலாம்.

சிவாஜியின் 'திருவிளையாடல்' படத்தில் தருமி வேசத்தில் வரும் நாகேஸ் சிவாஜியுடன் உரையாடும் கட்டம் இன்றுவரை பேசப்படும் ஒன்றாகும். நாகேசின் நகைச்சுவை உடல்மொழி பிரபலமானது. சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் சேராதிருப்பது கல்வியும் செல்வமும் என வரும் கேள்வி பதில் காலத்துக்குக் காலம் வடிவம் மாற்றிப் பேசப்படுகின்றது.

அது போல 'கல்யாணப் பரிசு' படத்தில் நடிகர் பாலையா பேசும் மன்னார் அன்ட் கம்பனி நகைச்சுவையும் மிக நீண்டகாலமாகப் பேசப்பட்டது. தரமான தமிழ் வசனங்களைப் போற்றிய ரசிகர்கள் இருந்த காலம் அது. பின்னாளில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் ஆபாச வசனங்களைப் பேசுவதை நகைச் சுவையாகக் கொண்ட ரசிகர்கள் இருந்தார்கள்.

பாக்கியராஜ்ஜின் 'புதிய வார்ப்புகள்' படத்தில் கவுண்டமணி பேசிய “ அமாவாசை ஒனக்கும் ஆசை, எனக்கும் ஆசை, வாத்தியாருக்கும் ஆசை" எனும் வசனம் போன்ற வசனங்கள் அக்காலத்தில் பிரபலமாக இருந்தன. கவுண்டமணி செந்திலை அடி அடியென அடித்துக் "கோமுடித் தலையா அடுப்பு வாயா" போன்ற வசனங்களைப் பேசிய போது அவை நகைச்சுவையாகப் பார்க்கப்பட்ட காலம் இருந்தது.

பின்னாளில் வடிவேல்,விவேக் போன்றோர் கொடி கட்டிப் பறந்தனர். தரமான வசனங்கள் என ஓரளவு சொல்லும்படியாக வசனங்கள் அமைந்தன. இவர்களின் உடல் மொழி நகைச்சுவை மிகப் பிரபலமாக இருந்தது.

சந்தானம், சூரி, யோகிபாபு எனக் காலத்துக்குக் காலம் நகைச்சுவை நடிகர்களின் புதுவரவு நீள்கிறது. தரமான வசனங்கள், தரம் குறைந்த வசனங்கள், தரமான உடல்மொழிகள், தரம் குறைந்த உடல்மொழிகள் எனத் தமிழ் சினிமாப் படங்களின் நகைச்சுவை மாறுபடுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement