• Jan 19 2025

விஜயா கண்ணுக்கு தெரிந்த அமானுஷ்யம்.. ரோகிணியை கழட்டிவிட்டு எஸ்கேப்பான மனோஜ்!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜூம்  விஜயாவும் நைட் எல்லாம் தூக்கம் வராமல் வாய்க்கு எதுவும் ஆகிவிட்டதா? கோணையாகி விட்டதா? என மாறி மாறி பயப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் பார்வதிக்கு தான் இந்த மாந்திரீகம், சாமியார் எல்லாம் தெரியும் என நைட் போன் பண்ணி பார்வதியுடன் கதைக்கின்றார் விஜயா.

மறுநாள் காலையிலேயே நேரத்துக்கு வெளியே போவதற்கு விஜயாவும், மனோஜும் வெளிக்கிட,  அண்ணாமலை இவ்வளவு நேரத்துக்கு எங்க போகிறாய் என கேட்கவும் பார்வதிக்கு உடம்பு சரியில்லை என இரண்டு பேரும் மாறி மாறி சொல்லுகின்றார்கள். சரி சாமி கும்பிட்டு விட்டு போ என சொல்லவும், சாமியரை கிட்ட போன விஜயா எலுமிச்சை பழத்தை பார்த்து பயப்படுகிறார். இதனால் நான் போற வழியிலேயே கும்பிட்டு விட்டுப் போகிறேன் என அவசர அவசரமாக வெளிகிட்டு செல்கின்றார்.


அதன்பின், மீனா முத்துவிடம் பார்வதி ஆன்டி பாவம் என சொல்ல, அவங்களுக்கு ஒன்றும் ஆகி இருக்காது இது நாங்க வச்ச எலுமிச்சை பழத்தோட வேலை தான் சீக்கிரமே மாட்ட  போறாங்க என்று சொல்லுகிறார்.

இதை அடுத்து மனோஜ், விஜயா மற்றும் பார்வதி ஆகியோர் சாமியார் ஒருவரை பார்க்கச் சென்று, அங்கு அவரிடம் நடந்தவற்றை சொல்ல, அவர் ஒரு எலுமிச்சையை மந்திரிச்சு கொடுக்கின்றார். இதனை முத்து வைத்திருக்கும் எலுமிச்சைக்கு பக்கத்தில் வைத்திருக்குமாறு சொல்லிக் கொடுக்கின்றார்.

அதன் பின்பு வீட்டுக்கு வந்த விஜயா, மனோஜ் தயங்கி தயங்கி யாரும் இல்லை என்று சாமி அறைக்கு சென்று எலுமிச்சையை வைக்கின்றார். அந்த எலுமிச்சை கீழே உருண்டு செல்ல, மனோஜை பிடித்து தள்ளி இப்போ நீ எடுத்து வை என பயப்படுகிறார் விஜயா. இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement