• May 19 2024

திடீரென இளம் நடிகர்களைப் போல செம பிஃட்டாக மாறிய கமல்ஹாசன்- வேற லெவல் கெட்டப்பாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசனின் 50 வருட திரையுலக வாழ்க்கையில் அவரகு்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் தான் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி 400 கோடிகளுக்கு மேல் அதிகமாக வசூல் சாதனை செய்தது.

இப்படத்தின் ப்ளாக்ஃபாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசனுக்கு படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்து விட்டன. இதனால் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக ஈடுபட்டு வருகின்றார்.இதற்காக அமெரிக்காவிற்கு சென்று உடல் மாற்றத்தை மேற்கொண்டு உள்ளாராம். 


 முந்தைய இந்தியன் படம் போலவே இரு வேறு வேடங்களில் நடிக்க உள்ளதால் இளமை தோற்றத்திற்காக தன்னை மிகுந்த தயாரிப்பிற்கு உள்ளாகி வருகிறார் கமல் ஹாசன்.அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. 


அந்தப் படத்தில் தாடி மீசை என அனைத்தையும் எடுத்துவிட்டு 90களின்  நாயகனாக திரும்பி உள்ளார் . இந்த புகைப்படத்தை அவர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.மேலும் இந்தியன் 2 படத்தில் கமலுடன், ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement