• May 09 2024

சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 8 இல் மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்-இந்த வாரம் பட்டைய கிளப்ப போகுது

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளம் இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் தான் விக்ரம். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். அத்தோடு இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் எனப் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

இப்படம் ஜுன் 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளை கமல்ஹாசன் விறுவிறுப்பாக ஆரம்பித்து நடத்தி வருகின்றார்.இதற்காக அவர் பாலிவுட் ஸ்டைலை பின்பற்றுகிறார்.

இன்று சென்னையில் ஆரம்பமாகும் அவரது பத்திரிகையாளர் சந்திப்பு, தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களிலும் ப்ரமோஷன் பணிகளை ஆரம்பிக்கவுள்ளார்.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வார நிகழ்ச்சிக்காக சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். அதற்கான படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது.

இது போன்று சில யு டியூப் சேனல்களின் நிகழ்ச்சிகளில் கூட கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளாராம். தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் இதைச் செய்ய திட்டமாம். ஏற்கெனவே, ஹிந்தியில் கபில் சர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஒரு படத்தை எப்படியெல்லாம் பிரமோஷன் செய்ய வேண்டும் என்பதை ஏனைய தமிழ் நடிகர்கள் கமல்ஹாசனிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/A1sU15cHeCw

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement