• Jul 04 2024

கியூட் மகனுடன் காஜல்; லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கும் ரசிகர்கள்- வைரல் போட்டோ இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர்  காஜல் அகர்வால். இவர் 2008 ஆம் ஆண்டு பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .விஜய், அஜித், சூர்யா, கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் . 

பின்பு கௌதம் கிச்லூ என்பவரை கரம் பிடித்து இல்லற வாழ்க்கைக்கு அடியெடுத்து வைத்தார். இதனிடையே 2021ம் ஆண்டு தான் தாயான செய்தியை உலகுக்கு அறிவித்தார்.

தனக்கு திருமணமாகி குழந்தை பிறந்து மீண்டும் வந்து உடல் எடை குறைத்து தற்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அவரது மகனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு தற்போது ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement