• Jul 07 2024

என்னமா இது?.. மாளவிகாவின் சேலையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை மாளவிகா மோகனன் மற்றும் மேத்யூ தாமஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘கிறிஸ்டி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.


இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் கிறிஸ்டி ஆல்வின் ஹென்றியின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ஆல்வின் இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை ராக்கி மவுண்டன் சினிமாஸ் சார்பில் சஜய் செபாஸ்டியன் மற்றும் கண்ணன் சதீசன் ஆகியோர் தயாரிக்க, பாடல்களுக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

நேற்று, நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு நடிகை மாளவிகா மோகனன் ஆரஞ் நிற சேலை அணிந்து வருகை தந்திருந்தார். அந்த சேலை சற்று மாடர்னாக இருந்ததால், மாளவிகாவின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இது என்னமா சேலை என்று நெகடிவ் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்த படத்தை வாங்கிய சென்ட்ரல் பிக்சர்ஸ் திரையரங்குகளில் வெளியிடவுள்ளது. மேலும் நடிகை மாளவிகா மோகனன் “கிறிஸ்டி” திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்ரமுக்கு ஜோடியாக “தங்கலான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement