தமிழ் சினிமாவின் இசை அமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் ஜஸ்டின் பிரபாகரன். இவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதனை அடுத்து இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான ஒரு நாள் கூத்து படத்தில் இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
கடந்த ஆண்டின் இறுதியில் பாலிவுட்டில் வெளியான மீனாட்சி சுந்தரேஸ்வர் படத்திற்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இந்த ஆண்டில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ராதேஷ்யாம் படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக மலையாளத்தில் ஃபகத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன் விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் கட்டா குஸ்தி படத்திற்கும் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் திருமணம் இன்று அக்டோபர் 5ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இத்திருமணத்தில் திரை உலகைச் சார்ந்த பிரபலங்களும், பாடகர்களும் இசையமைப்பாளர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Listen News!