• May 06 2024

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஷ்பு-நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர்களுடன் ஜோடிப் போட்டு நடித்தவர் தான் நடிகை குஷ்பு. மேலும்  இவரது நடிப்பில் பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.அத்தோடு  கமல், ரஜினி, சத்யராஜ், விஜய்காந்த், சரத்குமார் என இவர் ஜோடி சேராத நடிகர்களே இல்லை என்று கூறுமளவிற்கு அனைத்து நடிர்களுடனும் இவர் நடித்துள்ளார்.

தற்போது இவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிப்பது மட்டுமின்றி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் கலர்ஸ் தமிழில் நடித்து வந்த சீரியல் சில வாரங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்தது. அடுத்து அவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அத்தோடு விஜய்யின் வாரிசு படத்தில் குஷ்பு நடிப்பதாக செய்தி முன்பு வந்த நிலையில் தற்போது அதை அவர் மறுத்திருக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில்  இன்று குஷ்பூ மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் புகைப்படத்தை  வெளியிட்டு ஷாக் கொடுத்து இருக்கிறார்.

அவரது coccyx boneல் சர்ஜரி செய்திருக்கும் நிலையில் அவர் அடுத்த 2 நாட்களுக்கு முழு ரெஸ்டில் இருக்க போகிறாராம்.  




Advertisement

Advertisement

Advertisement