• Sep 13 2025

கருவிலே உயிர்.. வெளியே தப்பிக்கிறாயா..? ஜாய் கிறிஸில்டாவின் லேட்டஸ்ட் பதிவு.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

பிரபலமான டெலிவிஷன் ஷோ குக்காக மட்டும் அல்லாமல், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற செலிபிரிட்டி செஃப் மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபகாலமாக இணையதளங்களில் அவரது இரண்டாவது திருமண விவகாரம் பெரும் விவாதத்துக்குள்ளாகியது.


மாதம்பட்டி ரங்கராஜ், சமையல் உலகத்தில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர். அவரது சமையல் கலை, நேர்த்தியான சமையல் வீடியோக்கள் மற்றும் சமையல் நிகழ்ச்சிகளில் அவர் காட்டும் வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர். ஆனால், தற்போது அவரது  திரைக்குப் பின்னே நடக்கும் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் சமூகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அவரது இரண்டாவது மனைவியாக உள்ள ஜாய் கிறிஸில்டா சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதில் முக்கியமாக, இருவரும் திருமணம் செய்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.


இரண்டாவது திருமணம் பற்றி தகவல்கள் வெளியான பிறகு, அதில் முக்கியமான மற்றும் கவலைக்குரிய புள்ளியாக ஒரு செய்தி கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, மாதம்பட்டி ரங்கராஜ் இன்னும் தனது முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போதைய பெரிய சர்ச்சையின் மையமாக மாறியுள்ளது.

ஒருவருடன் legal-ஆக வாழ்கின்ற நிலையில், இன்னொருவரை திருமணம் செய்துகொள்வது சட்டப்பூர்வமா? என்பது போல பல கேள்விகள் சமூகத்தில் எழுந்துள்ளன. இது அவரது ரசிகர்கள் மத்தியிலும், சமூக நீதி செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மீண்டும் ஜாய் கிறிஸில்டா புதிய பதிவொன்றினை வெளியிட்டுள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜுடன் தான் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டதுடன், “ கருவிலே உயிர் உருவாகும் போது, உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது.... நான் உள்ளே துடிக்க நீ வெளியே தப்பிக்கிறாய்....இதுதானா உன் அன்பு அறிமுகம்...” என்று குழந்தை கூறுவது போல ஒரு பதிவினையும் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement