• May 19 2024

ஆதிரையின் கையைப் பிடித்து இழுத்த ஜான்சிராணி... வாயாலே வடை சுடும் குணசேகரன்... போட்டுடைத்த கரிகாலன்... சூடு பிடிக்கும் 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியலான 'எதிர்நீச்சல்' சீரியலானது நாளுக்கு நாள் அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. 

இந்நிலையில் இந்த சீரியலினுடைய இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஐஷு ரேணுகாவிடம் "நான் கவர்மெண்ட் ஸ்கூலிற்கே போறேன்" என்கிறார். அதற்கு நந்தினி "ஏன் அப்படி சொல்கிறாய்" எனக் கேட்கின்றார். பதிலிற்கு ஐஷு "பீஸ் அப்பா கட்டினால் பரவா இல்லை, பெரியப்பா தானே கட்டுறார்" என்கிறார். 


மறுபுறம் ஜான்சிராணி இனி ஒண்ணுமே வேலைக்கு ஆகாது எனக் கூறி ஆதிரையின் கையைப் பிடித்து இழுக்கின்றார். அதற்கு தர்ஷினி "இப்ப வெளிய போறீங்களா, இல்லேன்னால் போலீசிற்குப் போன் பண்ணவா" எனக் கூறுகின்றார். அதற்கு கரிகாலன் "இவங்க நிஜமாலுமே செய்து விட்டிருவாங்க அம்மா, மாமா மாதிரி இல்லை, அவர் தான் வெறு வாயாலேயே வடை சுடுவாரு" எனக் கூறிப் புலம்புகின்றார். 


அந்த சமயத்தில் குணசேகரன் மேலிருந்து கீழே இறங்கி வருகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement