• Apr 14 2026

சர்ச்சையை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா… ஒரே வரியில் பதிலடி கொடுத்த ரஜினிகாந்த்.!

shali / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் குறித்து சமீபத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கருத்து ஒன்று வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பியது. குறிப்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்து, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவலாக பேசப்பட்டது.


அதாவது, நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார். இந்த கருத்து வெளிவந்ததும், பல்வேறு தரப்பினரும் அதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இந்த கருத்தை கண்டித்து கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் தன்னுடைய பதிலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தன்னை குறித்து கூறப்பட்ட கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெளிவாக தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், “தவெகவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். 


அதை கண்டித்து எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.” என தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த பதில், அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement