• May 27 2026

அந்த இடங்களுக்கு அதிக Pad_ களை வைக்க சொல்லுவாங்க ..! மனம் திறந்த கபாலி நடிகை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தமிழில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா, தோணி, வெற்றிச்செல்வன், கபாலி உட்பட ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. இவர் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகவும் காணப்படுகின்றார். ஆனாலும் சினிமாவிலும் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார்.

இந்த நிலையில், நடிகை ராதிகா ஆப்தே சமீபத்திய பேட்டியில் அவர் தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,  சில படப்பிடிப்புத் தளங்களில் சந்தித்த சவால்கள் குறித்து எழுச்சியாக பேசினார். 

குறிப்பாக, சில பாடல் காட்சிகளில் அவர் மார்பகங்களை அதிகமாக காட்டும் வகையில் “Padding” பயன்படுத்துவதற்கு கட்டாயம் ஏற்பட்டது. படத்துல எடுப்பா தெரியுறதுக்காக என் மார்பகம் மற்றும் பின்பக்கத்தில் அதிக பேட்களை வைக்க நிர்ப்பந்திக்கப்பட்டேன். அவங்க என்கிட்ட வந்து, ‘மேடம், அதிக Padding’-ன்னு சொல்வாங்க. 


இது ஒரு மாதிரி அசௌகரியமாக இருக்கும். கோபமும் வரும். நீங்க உங்க வீட்ல உள்ள அம்மா, தங்கச்சிங்க கிட்ட இப்படித்தான் அதிக Padding வைக்க சொல்வீங்களான்னு கேட்க தோணும்.. என கூறியுள்ளார்.

இந்த தகவல்கள் பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், சிலர் கதாபாத்திர தேவைக்கும் படத் தேவைக்கும் இதற்கு காரணமிருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.  

Advertisement

Advertisement