• Apr 24 2026

காணாமல் போன கோமதி; திட்டித் தீர்த்த பாண்டியன்! - காந்திமதி செய்த செயலால் வந்த வினை!

shali / 1 month ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி மீனாவைப் பார்த்து உன்கூட, கதிர் கூட வந்தால் மட்டும் தான் ஆசைப்பட்டதை எல்லாம் வாங்க முடியுது என்கிறார். அதனை அடுத்து கோமதி மீனாவைப் பார்த்து இத்தன நாள் அவர் என்கூட பேசாமல் இருந்ததே இல்ல என்று சொல்லி கவலைப்படுறார். பின் செந்தில் மீனாவுக்கு போன் எடுத்து வீட்டில பெரிய பிரச்சனை ஆகிட்டு, அம்மாவை காணோம் என்கிறார்.

அதைக் கேட்ட மீனா ஷாக்காகி என்ன சொன்னீங்க அம்மாவைக் காணோமா என்று கேட்கிறார். அதைக் கேட்ட செந்தில் எல்லா இடத்திலயும் தேடி பார்த்திட்டோம் அவங்க எங்கயுமே இல்ல என்கிறார். பின் மீனா கோமதியைப் பார்த்து நீங்க கோவிலுக்கு போனத வீட்டில யாருக்காவது சொன்னீங்களா என்று கேட்கிறார். அதுக்கு கோமதி அம்மாக்கு சொல்லிட்டு தான் வந்தேன் என்கிறார்.


அதனை அடுத்து மீனா உங்களை காணோம் என்று காலையில இருந்து எல்லாரும் தேடிட்டு இருக்காங்களாம் என்று கோமதியைப் பார்த்துச் சொல்ல... அதைக் கேட்ட கோமதி என்னைக் காணேல என்று சொன்னவுடனே புருஷன் கவலைப்பட்டாரா என்று கேட்கிறார். அதுக்கு மீனா மாமா இடிஞ்சு போயிருக்கார் என்று சொல்லுறார்.

மறுபக்கம் செந்தில் பொலிஸ் ஸ்டேஷனில போய் கம்பிளைன்ட் கொடுக்கலாம் என்கிறார். அந்த நேரம் பார்த்து கோமதி அங்க வந்து நிக்கிறார். அதைப் பார்த்த உடனே எல்லாரும் எங்க போன... என்று அழுது கொண்டே கேட்கிறார்கள். பின் பாண்டியன் எங்கயாவது போறதா இருந்தால் சொல்லிட்டு போக வேண்டியது தானே என கோபமாகச் சொல்லுறார். அப்படியே கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement