சின்னத்திரை பிரபலமான நடிகர் நாஞ்சில் விஜயன் மற்றும் வைஷு இடையேயான சர்ச்சை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைஷு, நாஞ்சில் விஜயன் தன்னை ஆபாச புகைப்படங்களால் மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலாக, நாஞ்சில் விஜயன் கமிஷ்னர் அலுவலகத்தில் வைஷு மீது புகார் அளித்துள்ளார்.
சமீப காலமாகவே இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். வைஷுவும் நாஞ்சில் விஜயன் பற்றிய புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வந்தார். மேலும் சமீபத்தில் நாஞ்சில் விஜயனும் வைஷுவும் கடற்கரையில் குளித்த வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலானது

ஏற்கனவே நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்து ஏமாற்றியதாக வைஷு குற்றம் சாட்டி இருந்தார். அதற்கு புகார் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்பு இந்த விவகாரம் தீவிரம் அடைந்து பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. இதனால் நாஞ்சில் விஜயன் போலீஸ் ஸ்டேஷனில் சந்திக்கின்றேன் என்று வைஷுவுக்கு பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில், நாஞ்சில் விஜயன் மீது எந்தத் தவறும் இல்லை. நான் தான் வேண்டும் என்று பழி சுமத்தினேன் என காவல் நிலையத்தில் திருநங்கை வைஷு வாக்குமூலம் வழங்கி உள்ளதாக நாஞ்சில் விஜயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தெரியப்படுத்தியுள்ளார்.
Listen News!