• Apr 28 2024

'பையா 2' வில் ஜான்வி கபூர் நடிக்கிறாரா..? அதிரடிப் பதிவினை வெளியிட்ட தந்தை போனி கபூர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2010 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'. கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்த இப்படமானது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்தது. 


இந்நிலையில் தற்போது பையா படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக இருக்கிறது. ஆனால் 2-ஆம் பாகத்தில் கார்த்தி நடிக்கவில்லை பதிலாக ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர் என்றும் இதில் கதாநாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.


இதனைத் தொடர்ந்து ஜான்வி கபூரின் தந்தையும் தயாரிப்பாளருமான போனிக்கபூர் இந்த விடயத்தை மறுத்து உள்ளார்.


அதாவது "ஜான்வி கபூர் தமிழில் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்" என ட்விட்டர் பதிவின் மூலமாக தெரிவித்து உள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement