விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது நேற்று கோலாகலமாக நிறைவடைந்தது . இந்த சீசனில் பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் பங்குபற்றியிருந்தார்.

அவர் பிக்பாஸ் சீசனை விட்டு வெளியேரிய நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வரைலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது 100 நாட்களாக 18 போட்டியாளர்களை உள்ளடக்கி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வந்தது.

இந்த சீசனின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தெரிவானார். அதனை அடுத்து சவுந்தர்யா , விஷால் ஆகியோர் ரன்னராக்கினர். இந்நிலையில் டாப் 8 போட்டியாளர்களுக்குள் தெரிவாகியிருந்த ஜாக்குலின் இறுதி வாரங்களில் வெளியேறினார்.பிக்பாஸ் முடிவடைந்த நிலையில் தற்போது தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றினை ஷேர் செய்துள்ளார்.

அந்த வீடியோவில் "மக்கள் எல்லாருக்கும் ரொம்ப தாங்ஸ் நான் வெளில வந்ததுக்கு அப்புறம் இவ்ளோ லவ் சப்போட் நீங்க குடுப்பிங்க என்று நான் எதிர்பார்க்கவே இல்ல. அது என்னை கீல் பண்றதுக்கு ரொம்பவே சப்போர்ட்டிவா இருந்தது தங்கியூ சோமச் எனக்காக நீங்க இவ்ளோ பீல் பண்றது இந்த லவ்வுக்காக நான் என்ன பண்ணியிருக்கேன் என்று எனக்கு தெரில உங்கட லவ் சப்போர்டிவ நான் ரொம்பவே பத்திரமா பாத்துப்பன்.

கண்டிப்பா இந்த பினாலேய முடிசிட்டு உங்க எல்லார்கிட்டயும் வந்து பேசுறன். யார்யார்என்று தெரியாதவங்க எல்லாரும் எனக்காக அழுதிருக்கிறிங்க உண்மையாவே ரொம்ப ஹப்பியா இருக்கு ஏதோ ஒண்டு உங்களுக்காக பண்ணியிருக்கன் எண்டு நம்புறேன் தங்கியூ" என் உருக்கமாக ஜாக்குலின் வீடியோ வெளியிட்டது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
THANK YOU SO MUCH 💛 pic.twitter.com/QMw7qG3Y5r
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!