• Sep 17 2024

தனக்கு நிகர் யாரும் இல்லை என நிரூபித்த கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் 13வது ஆண்டு தினம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தனது வித்தியாசமான குரல் மூலம் பாப் இசை உலகின் மன்னன் என்று அழைக்கப்பட்டவர் தான் மைக்கேல் ஜாக்சன். இவர் இருக்கும் வரை குறுகிய காலத்தில் தன் காந்தக்குரலாலும் நடனத்தாலும் தனக்கு நிகர் யாரும் இல்லை என நிரூபித்தவர்.

மிகவும் வறுமைக்குடும்பத்தில் ஏழு சகோதரர்களுடன் பிறந்த இவர் இசை மீது கொண்ட ஆர்வத்தினால் தனது 6 வது வயதில் ஜாக்சன் 5 என்கிற குழுவில் தனது 4 சகோதரர்களுடன் இணைந்தார். ஆரம்பத்தில் வழக்கமான இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த அவர்கள் குழுவில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.

பின்னர் 1971 ஆம் ஆண்டு முதல் தனியாக பாப் பாடல்களை பாடத்தொடங்கினார். கிளப்புகளிலும் ஜாக்சன் பாட ஆரம்பித்தார். பின்பு தனது 9 வது வயதில் உலகப்புகழ்ப்பெற்ற டயானாவுடன் இணைந்து பாடினார். இதன் மூலம் புகழ் பெற்ற பாடகராக மாறினார்.

தொடர்ந்து 1972 ஆம் ஆண்டு தனது 14 வது வயதில் காட் டு பி தேர் என்ற ஆல்பத்தை தயாரித்தார்.அதன் பின்னர் மேலும் பென், ஃபார் எவர் மி உள்ளிட்ட பல ஆல்பங்களை தயாரித்தார். அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 1979 ஆம் ஆண்டு ஆப் தி வால் என்கிற ஆல்பத்தை வெளியிட்டார். அதில் இருந்த 4 பாடல்கள் அமெரிக்க அளவில் அவரை இசையுலகின் நாயகனாக மாற்றியது.

இப்பாடல்கள் அமெரிக்காவின் டாப் டென் பாடல்களில் இடம் பெற்றதை அடுத்து கிராமி அவார்டு உள்ளிட்ட பல விருதுகளை வென்றார். அத்தோடு தனது ஆல்பங்களில் நவீன ஒலி-ஒளி அமைப்புகள், நடன அசைவுகள் என புதுமைகளை புகுத்தினார். வெறுமனே பாடல்களாக இல்லாமல் அதில் ஒரு சின்ன கான்செப்ட் இருக்கும் வகையில் அல்லது உலகை பாதிக்கும் பிரச்சினைகளை சொல்வதுபோல் அமைத்தார்.

1982 ஆம் ஆண்டு உலகப்புகழ்ப்பெற்ற திரில்லர் ஆல்பத்தை ஜாக்சன் வெளியிட்டார். மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையில் மட்டுமல்ல, இன்றளவும் இசையுலகின் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது த்ரில்லர் தான். இந்த ஆல்பத்தில் உள்ள பாடல்கள் மூலம் மைக்கேல் ஜாக்சன் ஆப்ரிக்க ஆசிய நாடுகளிலும் இசை உலகின் நாயகனானார். மைக்கேல் ஜாக்சனின் காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட ஆல்பங்கள் உலக அளவில் பாராட்டப்பட்டது.

இவரின் மூன் வாக் நடனம் உலகம் முழுவதும் பரவியது. அதுமட்டுமல்லாமல் நடனம் ஆடும் போது செய்யும் சில சில சேட்டைகள் என்பன ரசிகர்களைக் கவர்ந்தது. இவரைப் பின்பற்றி தான் தற்காலத்து நடன கலைஞர்கள் எல்லோரும் உருவாகியிருக்கின்றனர்.

நடனத்தை தவிர குழந்தைகளையும், மிருகங்களையும் மிகவும் நேசித்த மைக்கேல் ஜாக்சன் 2500 ஏக்கரில் பண்ணை வீட்டை அமைத்து பல மிருகங்களையும் வளர்த்தார். தனது திருமண வாழ்க்கையில் சந்தோஷத்தை ஜாக்சனால் பெற இயலவில்லை. விவாகரத்து காரணமாக பெரும் தொகையை அளிக்கவேண்டி இருந்தது.

மேலும் தன் நிறம் மாறும் தோல் நோய்க்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார், பின்னர் மூக்கு உடைந்ததால் அதற்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார், இதற்காக அவர் எடுத்த வலி நிவாரண மாத்திரைகள் அவர் உடலை பாதித்தது. பாலியல் வழக்கு, குழந்தைகளை பாலியல் ரீதியாக நடத்தியதாக போடப்பட்ட வழக்கால் பெரும் தொகையை இழந்து மன உளைச்சலுக்கும் ஆளானார்.

இவ்வாறு தனது நஷ்டத்தை போக்க போராடிய இவர் கடந்த 2009 ஜூன் 25,ம் ஆண்டு தனது 50 வயதில் திடீரென மரணமடைந்தார். இவரது மரணம் மர்மமாகவே போனது. மைக்கேல் ஜாக்சன் தான் சம்பாதித்ததில் பெரும்பகுதியை எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளித்துள்ளார். இதற்காக இசை நிகழ்ச்சியும் நடத்தி நிதி திரட்டிக்கொடுத்துள்ளார்.

இவ்வாறு சிறந்த கலைஞனாக இருந்த இவர் மரணமடைந்து இன்றுடன் 13 வது ஆண்டுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement