• May 17 2024

'பப்ளிசிட்டி பிடிக்காதாம் ஆனால் போட்டோ மட்டும் போடுவாராம்'- அஜித்தை கிண்ணலடிக்கும் ப்ளூசட்டை மாறன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை மட்டுமன்றி நடிகர் மற்றும் நடிகைகளை கிண்டல் கேலி செய்து வரும் விமர்சகர் தான் ப்ளூசட்டை மாறன். இவர் மீது அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். அதிலும் அஜித் ரசிகர்களே இவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் வலிமை படத்தில் நாங்கள் வேற மாதிரி பாடலுக்கு அஜித் நடனமாடியதை பாடிசேமிங் செய்து ப்ளூசட்டை மாறன் ட்வீட் போட்டார். இதற்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.நேருக்கு நேராகவும் பலர் திட்டினார்கள்.

சோஷியல் மீடியாவில் திட்டிய அஜித் ரசிகர்களையும் கண்டபடி திட்டி, ப்ளூசட்டை மாறன் டுவிட் போட்டார். அஜித் தற்போது ஐரோப்பா டூர் சென்றுள்ளார். அங்கு அஜித் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி செம டிரெண்டாகி வருகிறது.

அஜித் பயன்படுத்திய கார், பைக் என அனைத்தை பற்றிய விபரங்களையும் தேடி பார்த்து வருகின்றனர்.அஜித்தின் பைக் ரைட், கார் டிரைவ், பெல்ஜியத்தில் சாதாரணமாக ரோட்டில் நடந்து சென்றது போன்ற போட்டோக்கள் செம வைரலாகி வருகிறது.

கடந்த ஒரு வாரமாகவே அஜித்தின் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதை வைத்து அஜித்தை வம்புக்கு இழுத்து டுவிட்டை ஒன்றை பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.அதில், தனது படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்கள், தனது படங்களின் ப்ரமோஷனுக்கு போக மாட்டார்.

விருது விழாக்கள், பேட்டிகள் ஆகியவற்றை தவிர்ப்பார். ஆனால் வருஷத்துக்கு 365 போட்டோக்களை நம்மாள் பார்க்க முடிகிறது. ஏன்னா அஜித்திற்கு பப்ளிசிட்டி பிடிக்காதாம். அவருக்கு தெரியாம, அனுமதி இல்லாம போட்டோ போடறாங்க. நம்புங்கண்ணே. நம்புங்க என நக்கலாக, அஜித்தின் போட்டோவுடன் போட்டுள்ளார்.

ப்ளூ சட்டை மாறனின் இந்த டுவிட்டால் கடுப்பான அஜித் ரசிகர்கள் அது அவரோட தனிப்பட்ட விருப்பம். அவர் போட்டோ 365 நாளும் ரசிகன் கூட எடுத்தது தான் வருது. அதுக்கு 5000 ஆட்டய போடுற ஆள் அவரில்ல. வெளிய வரலேனா வரலனு சொல்றது. வந்தா போட்டோ போட்டு பப்ளிசிட்டி பன்றாருனு சொல்றது. இந்தியாவிலே எந்த நடிகரும் இவர மாதிரி சாதாரண மக்களோட போட்டோவுக்கு போஸ் கொடுக்குறது இல்ல. நாமளே பக்கத்து ஊருக்கு போனா போட்டோ எடுத்து வாட்ஸ்ஆப் ஸ்டோரி, இன்ட்ஸ்கிராம், ஸ்னாப் எல்லாம் பண்றோம். இதுல அவர் பண்றதுக்கு என்ன.

இவர என்ன பண்றதுன்னே தெரியலையே. சென்னையில் எங்கயாவது கண்ணுல படுவாருன்னு பார்க்குறேன். நடக்க மாட்டேங்குது. நீங்களும், உங்க வீட்டுல இருக்கவங்களும் சாப்பாடு சாப்பிடுறதுக்கு அஜித் பப்ளிசிட்டி உங்களுக்கும் தேவைப்படுதுல. அது மாதிரி 365 டுவீட் போடுங்க. 365 நாள் நிம்மதியா சோறு சாப்பிடலாம். ஆடியோ விழாவிற்கு போறது, போகாதது அவரோட விருப்பம். அத பற்றி ஃபேன்ஸ் தான் கவலை படனும். உங்களுக்கு என்ன வந்துச்சு என கண்டபிடி திட்டி தீர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement