• May 17 2024

சினிமா, அரசியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளை கலாய்த்த 'வாஸ்கொடகாம' படத்தின் க்ளிம்ஸ் காட்சி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகையின் தம்பி என்ற அடையாளத்தோடு பிரமாண்ட இயக்குநரான ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் நகுல்.

இப்படத்தைத் தொடர்ந்து 'காதலில் விழுந்தேன்' என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பாய்ஸ் படத்தில் உடை எடை கூடியவராக இருந்த இவர் இப்படத்தின் மூலம் உடல் எடையைக் குறைத்து அழகான நடிகராகவும் அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து 'மாசிலாமணி', 'வல்லினம்', 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' உள்ளிட்ட ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு 'செய்' படம் வெளியானது. அதன் பிறகு சின்ன திரை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

மேலும் பி.சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகிவரும் 'வாஸ்கோடகாமா' படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜி கிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மன்சூர் அலிகான், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அருண் என்.வி இசையமைக்கிறார். இந்நிலையில் 'வாஸ்கோடகாமா' படத்தின் க்ளிம்ஸ் காட்சி நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. இந்த க்ளிம்ஸ் காட்சியில் சினிமா, அரசியல், மருத்துவம் உள்ளிட்ட சில துறைகளில் நடக்கும் நிகழ்வுகளை காமெடி கலந்து சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement