• Jul 11 2026

மீண்டும் தள்ளிப்போகிறதா ‘வடசென்னை 2’? தனுஷின் புதிய முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ்  மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பேட்டியில் தயாரிப்பாளர் ஐசரி K. கணேஷ் இதுகுறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அவரின் கூற்றுப்படி, தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்த படம் இதுவரை அவர்கள் இணைந்து செய்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையிலான புதிய கதைக்களத்தை கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது படத்தின் கதை மற்றும் நடிகர்கள் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்தப் படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர், தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வரும் வடசென்னை 2 திரைப்படத்தின் வேலைகள் தொடங்கப்படும் எனவும் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஏற்கனவே கர்ணன் படத்தின் மூலம் பெரும் வெற்றியை பெற்ற தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், ‘வடசென்னை 2’ குறித்த தகவலும் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement