தமிழ் சினிமாவில் ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பி தான் நடிகர் கிருஷ்ணா ஆவார். குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்தாலும், அவருக்கான பெரிய திருப்புமுனை தாமதமாகவே கிடைத்தது.

நாயகனாக நடித்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், குணச்சித்திர மற்றும் துணை வேடங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். குறிப்பாக நடிகர் தனுஷ் நடித்த ‘மாரி 2’ திரைப்படத்தில் அஜய் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதன் மூலம் அவரது திரைப்பயணம் புதிய கவனத்தை ஈர்த்தது.
தனது தனிப்பட்ட வாழ்க்கையில், கிருஷ்ணா கடந்த 2014ஆம் ஆண்டு ஹேமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் 2016ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதன் பிறகு நீண்ட காலம் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேசாமல் இருந்த அவர், தற்போது 47வது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பகிர்ந்த கிருஷ்ணா, தனது மனைவியின் முகம் தெளிவாக தெரியாத வகையில் புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில், தற்பொழுது அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!