• Sep 19 2024

இது தான் விக்ரம் படத்தின் கதையா? தீயாய் பரவி வரும் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனக்கென்று ஒர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தினை இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் ஒன்லைனர் சமூக வலைதளத்தில் வெளியாகிவிட்டது.

அதாவது கடத்தப்பட்டிருக்கும் அரசு அதிகாரியை மீட்க ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி செல்லும் மிஷன் தான் விக்ரம் படத்தின் ஒன்லைனர் என்று பிரபல தியேட்டர் நிறுவனம் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐஎம்டிபி இணையதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் பட்டியலில் விக்ரம் தான் முதலிடத்தில் உள்ளது.

மேலும் நான்கு ஆண்டுகளாக கமல் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் ரிலீஸாகும் விக்ரம் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். நான்கு ஆண்டுகளாக தன் நடிப்பில் எந்த படமும் ரிலீஸாகாததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார் கமல்.

விக்ரம் படத்தின் ரிலீஸுக்கு முன்பு தன் நண்பர் ரஜினிகாந்தை அவரின் போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார் கமல். அத்தோடு அவருடன் லோகேஷ் கனகராஜும் சென்றிருந்தார். ஒரு வேளை தலைவர் 170 படத்தை கமல் ஹாசன் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

Advertisement